எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் மட்டும் 3 சதவீதம் அதிகரித்து உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளைச் சேர்ந்த 3,029 மாணவர்கள், 3,579 மாணவிகள் உட்பட 6,608 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 2,803 மாணவர்கள், 3,470 மாணவிகள் உட்பட, 6,273 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதிகரிப்பு
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.54 சதவீதம் பேரும், மாணவியர் 96.95 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி 95 சதவீதம். கடந்த ஆண்டு மாணவர்கள் 88.9
சதவீதம், மாணவியர் 94.97 சதவீதம், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதம் ஆக இருந்தது. இந்த
ஆண்டு தேர்ச்சி விகிதம், 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், கடந்த ஆண்டை காட்டிலும் குறைவான மாணவ, மாணவியரே இந்த ஆண்டு தேர்வு எழுதினர். ஆனால், மாணவர்கள், மாணவியர், ஒட்டுமொத்தம் என மூன்று வகையான தேர்ச்சிகளும், கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்திருப்பது, ஆறுதல். அதே வேளையில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாட வாரியாக 100 மதிப்பெண் பெறுவோர்
எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வீழ்ச்சி
கடந்த ஆண்டு, 22 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 19 பள்ளிகள் மட்டுமே இந்த சாதனையை பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு 1,780 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு இது 1,398 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, கணித பாடத்தில் 15 பேர், அறிவியலில் 287 பேர், சமூக அறிவியலில் 73 பேர் என, மொத்தம், 375 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டில் கணிதம் 15 பேர், அறிவியல் ஏழு பேர், சமூக அறிவியல் 56 பேர் என, 78 பேர் மட்டுமே நுாற்றுக்கு நுாறு எடுத்துள்ளனர். சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அனிதா, புவனேஸ்வரி ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அளவில் முதலிடம் பிடித்தனர்.
அதே பள்ளி மாணவி நஸ்வின் ரோசன், கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயபிரியா ஆகியோர், 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மார்க்கெட் தெரு பெண்கள் பள்ளி மாணவி சிந்தியா, 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
ஆய்வு அவசியம்
கடந்த ஐந்தாண்டுகளாக, மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம், ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருவது, பாராட்டுக்குரிய விஷயம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், நுாற்றுக்கு நுாறு என்ற இலக்கை இந்தப் பள்ளிகள் அடையுமென்பதில் சந்தேகமில்லை. அதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்.
ஏனெனில், இந்த ஆண்டிலும் வழக்கம் போல மாணவர்கள் யாரும் சாதிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும், 'சென்டம்' எடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையும், நுாற்றுக்கு நுாறு எடுக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையும் குறைவதற்கான காரணங்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் எண்ணிக்கை சரிவதைத் தடுக்கவே
முடியாது.









