மாநில மொழிகளில், பள்ளிப் படிப்பை படித்துள்ள லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். பள்ளி கல்வித் திட்டத்தில், மாநிலங்களுக்கு இடையே பல்வேறு மாறுபாடுகளும் உள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதற்கும் சேர்த்து, ஒரே மாதிரியாக நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது; இது, ஏற்கத்தக்கதல்ல. ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கிராமப்புற மாணவர்களின் தலையில் விழுந்துள்ள இடி மட்டுமல்லாது, நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
இந்த உண்மைகளை மீறி, பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தினால், அது, மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும். அதனால், நாடு முழுவதும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், உடனடியாக, தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.








