தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும் முறை: மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.








