Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Do not compare it to others:
அடுத்தவரிடம் ஒப்பிடாதீர்கள்-து.ராமராஜ்
நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்றும் எப்படி இருப்பது நல்லது, சிறந்தது என்று வரையறை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் எப்படி இருந்தால் சிறப்பு, நல்லது என்று ஒரு கற்பனை வடிவம் வைத்திருக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் அந்த வரையறையுடன் ஒப்பிடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தக் கற்பனை வடிவத்துடன் ஒப்பிடப்பட்டே நம்மால் நிர்ணயிக்கப் படுகிறான். இந்தக் கற்பனை வடிவத்திற்கு முழுமையாகப் பொருந்துகிற கணமும், மனிதனும் கிடையாது என்பதால் இந்த ஒப்பீடு துன்பத்திற்கு ஆணி வேராக இருக்கிறது.
இதற்கு மேலும் கூடப் போகிறோம். முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியையும், தற்போது நடக்கும் ஒரு நிகழ்வையும் ஒப்பிட ஆரம்பிக்கிறோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடும் பழக்கம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் விடுகிறது. அதனால் என்ன தவறு என்று கூட சிலர் கேட்கலாம். இந்த ஒப்பிடும் பழக்கத்தால் நம்மால் நடப்பதை ரசிக்க முடியாமல் போகிறது, மனிதர்களைத் தனித்தன்மையை சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது என்பதே கசப்பான உண்மை.
சூரியன்...
நிலா..
விண்மீன்..
கடல்..
அருவி..
வானம்..
நெருப்பு..
மலை...
பூக்கள்..
மரம்..செடி .. கொடிகள்... இப்படி எத்தனையோ.. இவை அவற்றின் தனித்தன்மையில் அழகானவைகளே....
🌺✅எந்த ஒரு கணமும் அப்படியே திரும்ப நிகழப்போவதில்லை. அது இயற்கையின் நியதி. அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கும் போது, ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கும் போது மற்ற கணங்களின் தனியழகை, தனிப் பயன்பாட்டைக் காண முடியாமல் போகிறது. ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். ஆனால் அதே போல திரும்ப வரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி வந்து கொண்டிருக்குமானால் அதுவே நமக்கு சலித்து விடாதா?
🌺✅அதே போலத் தான் மனிதர்களும். ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். உலகம் இயங்க அனைத்து வித மனிதர்களும் அவசியமானவர்கள். அதனால் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் இயல்பின் படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து அவர்களைஅங்கீகரியுங்கள். ஒரே மாதிரி மனிதர்கள் மட்டுமே இருந்தால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
🌺✅ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலில் கதாநாயகி கல்யாணி தன் கணவனிடம் மிக அழகாகச் சொல்வாள். "நம்ம வீட்டில பூக்கற ரோஜாப்பூ இருக்கு பாருங்க... இதை நான் ரொம்ப ரசிக்கிறேன்... நீங்களும் ரசிப்பீங்க. ஆனா யாரும் ஒரு ரோஜாப்பூவை விமரிசனம் பண்றது இல்லை. இல்லைங்களா. ஒரு ரோஜாப்பூவிலே இன்னும் ஒரு இதழ் கூட இருந்தா தேவலாம்னோ, இந்த வாசனையோட கொஞ்சம் மல்லிகை வாசமும் கலக்காம இருக்கிறது ஒரு குறைன்னோ நாம்ப நினைக்காம இருக்கறதுக்குக் காரணமே நாம்ப ரோஜாவை ரோஜாவா எடுத்துக்கறது தான். அதைப் பத்திக் கற்பனைகளோ எதிர்பார்க்கிற காரியமோ இல்லை. நாம்ப ரோஜா கிட்டே எதிர்பார்க்கிறது ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்திட்டா... அவங்க இருக்கற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா இந்த மாதிரி பிரச்னையே இருக்காது"
🌺✅நம் மனதில் உள்ள வரையறைகள் கற்பனையானவை. அதற்கு ஏற்ப நிஜத்தில் எதிர்பார்க்கும் போது நாம் ஏமாற்றத்தையே சந்திக்க நேர்கிறது. அதே போல ஒரு கணத்தைப் போல இன்னொரு கணமோ, ஒருவரைப் போல இன்னொருவரோ இருக்க முடியாது என்பதையும் நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நமது மனம் வழக்கம் போல ஒப்பிட்டுப் பார்க்குமானால் அது முட்டாள்தனம் என்பதை அக்கணமே உணர்ந்து தெளிய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வாழ்க்கையை ரசிக்க முடியும். சந்திக்கும் மனிதர்கள் மூலம் பலனடைய முடியும். மன அமைதி பெற முடியும்.
--
🌺அன்புடன்-து.ராமராஜ்🌺
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








