திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 மையங்களில் ஜூன் 29-ஆம் தேதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.2016 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.
இதில், தேர்ச்சி பெறாத மாணவ - மாணவிகள் உடனடி சிறப்புத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று கல்வித் துறை தெரிவித்திருந்தது.இதையடுத்து, ஏராளமான மாணவ - மாணவிகள் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள் ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.30-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும், ஜூலை 1-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வும், 2-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாளும், 4-ம் தேதி கணித தேர்வும், 5-ம் தேதி அறிவியல் தேர்வும், 6-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.
இதற்காக, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு