பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில்,
ஜூன், 13, 14ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை
இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுதாதவர்கள், தேர்வு எழுதி, சில பாடங்களில்
தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், சிறப்பு
தத்கல் திட்டத்தில் ஜூன், 13, 14ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலரான, சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது,
தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும், ஏற்கனவே தேர்வுக்கு வழங்கப்பட்ட, 'ஹால்
டிக்கெட்'டையும், கல்வி அலுவலக அலுவலரிடம் காட்ட வேண்டும்.இவ்வாறு
செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.







