
அனைத்து பல்கலைக்கழகங்களும், மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை
ஏற்படுத்தவேண்டும். மாணவர்கள், பெற்றோர் எழுப்பும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இந்த ஹெல்ப்லைன் இருக்கவேண்டும். மாணவர் சேர்க்கை முடியும் வரை இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும். மாணவர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும்.
மாணவர் சேர்க்கையில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.








