தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும்
மாணவர்கள் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களே இடம்பெற்று ஆக்கிரமித்து
வருகின்றனர். சரியான பயிற்சி, குடும்ப சூழல், டியூஷன் இப்படி பல
காரணங்களால் தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவக்
கல்லுரிகளில் சேர்வது அரிதாகிக்கொண்டு வருகிறது. இதனால்தான், தங்களுடைய
பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள், அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைக்க கடன்பட்டு, கஷ்டப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர்களில் 14 பேர் மருத்துவர்களாகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் கொத்தமங்கலம் கிராமத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களில் 14 பேர் மருத்துவர்களாகி இருக்கிறார்கள். கடந்த 2008-க்குப் பிறகு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பி.மங்கையர்க்கரசி, ஆர்.நித்யா, சோபியா, எஸ்.பிரியங்கா, பி.ரசிதா, பி.ஷாலினி, டி.யமுனா ஆகியோர் தற்போது மருத்துவர்களாக உள்ளனர். இதேபோல, அரசு ஆண்கள் பள்ளியில் படித்த எஸ்.சிவபாரதி, எம்.பார்த்திபதாசன், கே.தினேஷ்குமார், அம்சத்குமார், சிங்கார வடிவேலன், குமரேசன், ராமானுஜம் ஆகியோர் தற்போது மருத்துவர்களாக உள்ளனர். இதில், ஒருவர் பல் மருத்துவர், 2 பேர் கால்நடை மருத்துவர். இது மட்டுமின்றி பலர் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரிகளிலும் படிக்கின்றனர்.
இதுகுறித்து அந்த கிராமத்தினர் கூறுகையில், “இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக கடுமையாக உழைக்கின்றனர். இங்கு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதால், மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 14 மருத்துவர்கள் வேறு எந்த அரசுப் பள்ளிகளிலும் உருவாகவில்லை” என்று பெருமை பேசுகின்றனர். இப்போது கொத்தமங்கலம் கிராம மக்களும், அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும் தமிழகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ‘உங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டுமா அரசுப் பள்ளிகளில் சேருங்கள்’ என்று.