புதுச்சேரி கடற்கரையை அடுத்துள்ள காந்தி திடலில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, சட்டப்பேரவை சென்றார் நாராயணசாமி.
அங்கு முதல்வர் அறையில் தனது
பணிகளைத் துவக்கிய நாராயணசாமி, 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50% மானியம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு வீட்டில் அதிகபட்சமாக 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால், மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்ற நலத் திட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டுள்ளார்.








