தேர்தலில் வெற்றி பெற்று, மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும்
பதவியேற்றதும், 100 யூனிட் மின்சாரத்துக்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
அதன்படி, மே 23-ஆம் தேதி முதல் எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும்
இந்தச் சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை அண்மையில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டணச் சலுகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உதாரணமாக, ஒரு நுகர்வோரிடம் மே 30-ஆம் தேதி மின்சாரப் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டால், அவருக்கு சலுகை முழுவதுமாக கிடைக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் மின்நுகர்வோருக்கு உள்ளது.கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 - 200, 201 - 500, 501 - 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி கடந்த இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் மட்டும் வரை பயன்படுத்தியிருந்தால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது: ஆணை பிறப்பிக்கப்பட்ட (மே 23) தேதியிலிருந்து 1 மாதம் கழித்து மின்சாரம் கணக்கெடுக்கப்பட்டால் 50 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும். உதாரணமாக கட்டணச் சலுகை ஆணை பிறப்பிக்கப்பட்ட மே 23-ஆம் தேதிக்குப் பிறகு, 10 நாள்கள் கழித்து மின்சாரம் கணக்கெடுக்கப்பட்டால், ஒரு மாதத்துக்கு 50 யூனிட் என்றால் 10 நாள்களுக்கு எத்தனை யூனிட்டுக்கான கட்டணத்துக்குச் சலுகை என்ற விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு சலுகை அளிக்கப்படும் என்றனர்.
2 மாதம்: கட்டணச் சலுகை அறிவிப்புக்கு (மே 23) பிறகு, தொடர்ந்து 2 மாதங்கள் முழுமையாக மின்சாரம் பயன்படுத்திய நுகர்வோருக்கு மட்டுமே முழுவதுமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இடையில் உள்ள சில நாள்களுக்கான கணக்கீட்டு கட்டணச் சலுகை குறித்த சந்தேகங்களை அந்தந்த மின்சார அலுவகத்தின் உதவிப் பொறியாளரிடம் நுகர்வோர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவரை 28 லட்சம் பேர்: 100 யூனிட் மின் கட்டணச் சலுகை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் (மே 23) முதல் இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சலுகைக் கட்டணம் கிடைப்பது உறுதியாகியுள்ளது என்றனர் அதிகாரிகள் .