புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் இணை அமைச்சருமான நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கடற்கரையை அடுத்துள்ள காந்தி திடலில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, சட்டப்பேரவை சென்றார் நாராயணசாமி.
அங்கு முதல்வர் அறையில் தனது
பணிகளைத் துவக்கிய நாராயணசாமி, 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50% மானியம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு வீட்டில் அதிகபட்சமாக 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால், மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்ற நலத் திட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டுள்ளார்.