அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங்கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ.,
படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20இடங்களில்நடக்கிறது.எம்.இ., -
எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற
தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை
துவங்குகிறது.
எம்.பி.ஏ., -
எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நாளையும்; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு
நாளை மறுநாளும் தேர்வு நடக்கிறது.இதில், எம்.பி.ஏ.,வுக்கு, 14 ஆயிரத்து,
568 பேர்; எம்.சி.ஏ., படிப்புக்கு, 6,323 பேர்; எம்.இ., - எம்.டெக்.,
படிக்க, 17 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.