ஆண்டு தோறும், ஜூன், 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக்
கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், குழந்தை தொழிலாளர்களை
கண்டறிதல், மீட்டல், தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்,
விழிப்புணர்வுநிகழ்வுகளுக்கு தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும்,
'ஜூன், 12 ஞாயிறு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய பணி நாளான, இன்று,
அரசின் அனைத்து அலுவலகங்களிலும், அதிகாரிகள், அலுவலர்களும், குழந்தை
தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை
கமிஷனர் அமுதா, கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.