எம்.பி.பி.எஸ்., படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்,
நேற்றுடன் முடிந்த நிலையில், 24,100 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
யும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும்,
1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு
தொடர்பான சிக்கல் தீர்ந்ததால், மே 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில்
விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. நேற்று வரை, 24,100 பேர்
விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 32 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள்
பெற்றிருந்தனர். தற்போது, விண்ணப்பம் பெற்றவர்கள் எண்ணிக்கை, 8,000
குறைந்துள்ளது. 'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று
கடைசி நாள்; தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது' என,
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.