பட்டதாரி ஆசிரியர் எம்பில் பட்டத்திற்கு இரண்டாவது ஊக்கஊதியம் பெற அடிப்படை அரசாணைகளை நிலைபடுத்தியும் ,அடிப்படை அரசாணைகளின் படியும் பிறபிக்கபட்ட இரண்டாவது ஊக்கஊதியம் அனுமதி அளிக்கப பட்டு அதன்படி ஊக்கஊதியம் பெறப்பட்டு -181 நாட்களுக்கு பிறகு சட்ட விரோதமாக -கடிதத்தின் மூலம் ஆளுனரால் பிறபிக்கபட்ட அரசாணையை 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளி கல்வித்துறைச் செயலரால் பிறபிக்கபட்ட கடிதம் சட்ட விரோதம் என சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள் தடையாணை பிறப்பித்து உத்திரவிட்டுள்ளது
இன்றளவும் நீடித்து வருகிறது இந்த தடையாணையின் 2ம் எதிர் மனுதாரர் பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் நீதிமன்ற தடையாணை உத்திரவினை மீறி அவமதிப்ப்பு செய்யும் நோக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டிலும் ஆளுகையிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தணிக்கை அலுவலர்கள் மூலம் தமிழகம் முழுதும் பட்டதாரி ஆசிரியர் எம்பில் பட்டத்திற்கு இரண்டாவது ஊக்கஊதியம் 18.01.2013 க்கு முன்பு பெற்றது மிகையானது என்று நீதிமன்ற தடையாணைக்கு எதிராகவும் சட்ட விரோதமாகவும் தணிக்கை செய்திருப்பது நீதிமன்ற அவ மதிப்பாகவே கருதிட வேண்டி உள்ளது -மேலும் தனது கட்டுபாட்டில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எம்பில் பட்டத்திற்கு இரண்டாவது ஊக்கஊதியம் பெற்று 10 ஆண்டு பணியை மன நிறைவுடன் முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஆணை வழங்கிடுவதில் தடையை உருவாக்கி உள்ளனர் மேலும்ச ட்ட நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல் செயல்படும் இந்த போக்கினைகைவிடவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு செல்லாமல் சுமூக தீர்வுகண்டிட பணிந்து வேண்டல் சார்பு .
பார்வை
1. அரசாணை 18 ப க துறை நாள் 18.01.2013
2.அரசாணை 1024 கல்வி அறிவியல் தொழில் நுட்பத் துறை நாள் 09.12.1993
3. ஊக்க ஊதியம் சார்ந்த அடிப்படை அரசாணை 42.கல்வித்துறை நாள் 10.01.1969
4. FUNDAMENTAL RULE (RULE 26-A ) GOVERNMENT OF INDIA LETTER NO . F 129/34 HOME (ESTDE )DT 29.03.1935
5. அரசாணை.1446 PUBLIC SERVIES DT 01.05.1934
6. சட்ட விரோதமான பள்ளி கல்வித்துறை செயலரின் நிர்வாக ரீதியிலான விளக்க கடித எண் 129
ப க துறை (5(2)2013-1 நாள் 17.07.2013
7. உயர் நீதிமன்ற நீதிப் பேராணை WP NO .22412 OF 2013 தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் திரு. பி .நாராயணசாமி அவர்களால் பெறப்பட்ட
தடையாணை (JUDGEMENT IN REM )
8.சென்னை உயர் நீதிமன்ற மற்றொரு நீதிப் பேராணை WP NO 21910/13 நாள் :7108/13
9. மதுரை உயர்
நீதிமன்ற தடையாணை WP 12825/2013 நாள் 11.08.2013
10. இந்திய அரசமைப்பு சட்டம் உறுப்பு எண் .162
REFERENCE நீதிப் பேராணைகள் WP (MD ) NO 960/2011 நாள் 16.04.2012
(The Teacher is entitled for incentive increment from the date following the last date of examination by setting aside the limitation imposed by the Government of Tamilnadu )
11. அரசாணை 112 பள்ளி கல்வி M 2 துறை நாள் 28.07.2011
12. சென்னை உயர் நீதிமன்ற WP எண்கள்
10847,10848,10850,10851,10852,10853,10854,10855,10856,10857,10858,10859,10860,10861,10863,10864,10865,
10866,10867,10868 தீர்பாணைகள் நகல் நாள் 04.02.2011
மதிப்புமிகு அய்யா,
இந்திய அரசியலமைப்பு சட்டம் 19 1 (c ) வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி நான் பட்டதாரி ஆசிரியராக அன்று பணியில் சேர்ந்தது முதல் தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் உறுபினராக பொறுப்பாளராக ( ) செயல் பட்டு வருகிறேன் -அரசியலமைப்பு சட்ட கடமைகளையும் செவ்வனே செய்தும் நிறைவேற்றியும் வருகிறேன்
நான் ம் நாளன்று பணியில் தொகுபூதியத்தில் ( மாதம் (ரூ .4000 ) ) நாள் வரை பணி செய்து சங்கம் கோரிக்கை வைத்து போராடி முறையான கால முறை ஊதியம் 01.06.2006 முதல் பெற்று வருகிறேன் .
இந்நிலையில் எம்பில் முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கிட சங்கம் கோரிக்கை வைத்து போராடி பெற்று தந்ததன் பேரில் நாள் முதல் அரசாணை 42.நாள் 10.01.1969 அடிப்படையாக பின்பற்றி யும் தொடர்புடைய அரசாணைகளை ஆய்வு செய்த பின்பு இரண்டாவது ஊக்க ஊதியம் முதல் அனுமதிக்கப்பட்டு பெற்று வருகிறேன் .
ஒரு அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் தன்னுடைய பணி நிலையில் தனது கல்வி தகுதியை உயர்த்தி
கொள்ளவும் உயர்கல்வி தேர்ச்சி அடையும்போது தன்னுடைய படிப்பின் கடைசி தேர்வு நாளில் இருந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே பார்வை 4, 5 ல்
குறுப்பிடபபட்டுள்ள அரசாணைகளும் தமிழ்நாட்டுஅரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உருவாக்கப்பட்ட அடிப்படை பணி விதிகள் (FUNDAMENTAL RULE ) 26-A வும் தெளிவாக கூறப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் பார்வை 3ல் கண்டுள்ள அரசாணை 42 நாள் 10.01.1969 ல் கல்வித்துறையில் ஆசிரியர்கள் பெறப்பட வேண்டிய ஊக்க ஊதியம் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வியின் கடைசி தேர்வு நாளிலிருந்து வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறையிலும் நிலைமுறையிலும் இருந்து தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்து கொண்டுள்ளது .
பார்வை 2ல் கூறப்பட்டுள்ள அரசாணை பட்டதாரி ஆசிரியர் எத்தனைஊக்க ஊதியம் தனது பணிக்காலத்தில் பெறலாம் என்ற தெளிவுரையும் அதற்கான சட்டபூர்வ வழக்கு நடவடிக்கையும் மேலும் பார்வை 1ல் கண்ட அரசாணையில் பார்வை 2ல் கண்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள M Ed என்பதற்கு பதில் எம்பில் அல்லது பி எச் டி பட்டம் பெற்றிருப்பதால் 2வது ஊக்க ஊதியம் அனுமதிக்க வேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது .
அவ்வாணையில் எம்பில் படித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் 18.01.2013 அரசாணை வெளிடப்பட்ட நாள் முதல் ஊக்க ஊதியம் வழங்கலாம் என்று அரசாணை 18 நாள் 18.01.2013 ல் குறிபிடப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.
பார்வை 10 ன் படி அரசமைப்பு சட்டம் உறுப்பு -162 ன் படி ஆளுநரின் ஒப்புதலின் படி வெளிடப்பட்ட அரசாணையில் திருத்தும் செய்திட ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு அத்தகைய திருத்தும் எதுவும் இந்த அரசாணையில் ஆளுனரால் செய்யபடாமல் அரசாணை வெளிடபட்டு 181 நாட்களுக்கு பிறகு வெறும் நிர்வாக நடவடிக்கை மூலமாக் பார்வை 6ல் கண்ட கல்வித்துறை செயலரின் கடிதம் முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமல்ல
அடிப்படை அரசானைகளுக்கு விரோதமானதும் ஆகும் என்ற அடிப்படையில் பார்வை 7,8,9,ஆகியவற்றின் மூலம் சென்னை மதுரை உயர் நீதிமன்றம் மூலம் தடையாணை கள் பெறப்பட்டு நீதிப் பேராணைகள் ஆகஸ்ட் 2013ல் பிறபிக்கப்பட்டுள்ளது.இந்த நீதிப் பேராணைகள் JUDGEMENT IN REM -NOT IN PERSON சட்ட நோக்கில் பொதுவான அனைவருக்கும் பொருந்தக்கூடியது
இந்த தடையாணையின் எதிர் மனுதாரர்கள்
1. பள்ளி கல்வித்துறை செயலாளர்
2.பள்ளிகல்வி இயக்குனர்
3.தொடர்புடைய மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள் தமிழகம் முழுதும்
இந்நாள் வரையில் எதிர்மனுதாரர்கள் மூலம் எதிர் வழக்குரை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை தாக்கல் செய்ய சட்டபூர்வ வழியும் இல்லை
தடையாணையை எதிர்த்து ரத்து செய்திட மேல் முறையீடு செய்யாத போது தடையாணை இன்ற்றளுவும் நடைமுறையில் இருந்து வருகிறது என்பதுவே சட்டபூர்வமானது ஆகும்
பார்வை 11,12,13 ஆகியவைகளில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு பெறப்பட்ட தடையாணை கள் மற்றும் தீர்ப்புகளில் ஊக்க ஊதியம் பெற LAST DAY OF EXAMINATION மட்டுமே எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்ற பார்வை 3 ல் கண்ட அடிப்படை அரசாணை 42.நாள் 10.01.1969 உறுதி ப படுத்தி உள்ளது .
மண்டல தணிக்கை துறையினர் தடையாணையின்
2ம் எதிர் மனுதாரரின் நேரடி கட்டுபாட்டில் வரும் அலுவலர்கள்
ஆவார்கள் இவர்கள் பள்ளிகல்வித்துறை செயல்முறைகள் ஊக்கஊதியம் சார்ந்த அடிப்படை பணிவிதிகள் அடிப்படை அரசாணைகள் தொடர்ந்து சுதந்திர காலத்திற்கு முன்பே பின்பற்றிவரும் நடைமுறை ஆகியவற்றையும் பல்வேறு பார்வையில் கண்டுள்ள வழக்குகளின் மூலம் பெறப்பட்ட நீதிப் பேராணைகள் நீதி தீர்ப்புகள் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்யாமல் மேலெழுந்த வாரியாக மிகையாக பெறப்பட்டது என்று ஒரு பள்ளிகல்வி செயலரின் கடித்தை அடிப்படையாக கொண்டு தணிக்கை செய்து அறிக்கைகளை அளிப்பது சட்ட விதி மீறல் என்பதை தவிர நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதிட இடம் உள்ளது என்பதனை சுட்டி காட்ட விழைகிறோம்
மேலும் இந்த ஊக்க ஊதிய பணப்பயன் பெற்றதில் அரசுக்கு 10% ஊதியம் தன்பங்கேற்ப்பு ஓய்வூதியத்திற்கு செலுத்தப் பட்டுள்ளது . ஆகவே சட்ட விதிகள் நீதி தீர்ப்புகள் நீதிப் பேராணைகள் அடிப்படை அரசாணைகள் இவை எதனையுமே கணக்கில் கொள்ளாமல் சட்டத்தின் ஆட்சியின் அலுவலர்கள் என்பதனை மறந்து தனது இஸ்டத்திற்கு செயல்படும் போக்குசட்ட விரோதம் என்பதனை பணிவுடன் தெரிவித்தி கொண்டு இதன் அடிப்படையில் தேர்வு நிலை ஆணை வழங்கிடுவதில் தடை உருவாக்கினால் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி வழக்கு தொடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதனையும் பணிந்து சமர்பிகின்றோம்
[6:58AM, 18/06/2016] Tr Selventhiran: அன்பிற்கினிய மாநிலம் முழுதும் எம்பில் ஊக்க ஊதியம் பெற்று தேர்வு நிலை தடை உருவாகி உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்டுள்ள மேமொரண்டதினை நன்கு படித்து உங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை உடன் தொடர்பு கொண்டு செயல் பட கனிவுடன் வேண்டுகிறோம் பல மாவட்டங்களில் இருந்து தொடர்பு கொண்டதன் பேரில் இந்த மனு தயாரிக்கப்பட்டு வழி காடபட்டுள்ளது அடிப்படை இது தான் இதன்அ அடிப்படையில் செயல் படுக
அன்புடன்
சா.தோ.அ. செல்வேந்திரன் மாநில துணை பொது செயலாளர் தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்