பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை ஜூன் 3வது வாரம் நடத்த வேண்டும் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
இவற்றில் சுமார் 1 லட்சத்து 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்ற வேண்டும்.ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்கள் குறைந்த பட்சம் ஒருஆண்டாவது அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். மாறுதல்பெற்ற பிறகும் ஒரு ஆண்டு அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளின் இடையே, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்களை பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகள் வழங்கி வருகின்றன. பாரபட்சமில்லாமல், ஒளிவுமறைவு இல்லாத வகையில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கே பணியிட மாறுதல் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பிரச்னையின்றி பணியாற்ற முடிகிறது.
இந்நிலையில், உடனடியாக பணியிட மாறுதல் கவுன்சலிங் நடத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஜூன் 3வது வாரத்தில் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக, மாறுதல் கவுன்சலிங் குறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட உள்ளது.








