அற்புதமான அரசுப்பள்ளிகள் :
உலக புத்தக தினத்தன்று உலக சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில்(ASSIST WORLD RECORDS & RECORD RAISERS) இடம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் நேற்று திருவண்ணாமலை மாவட்டம்,

வெம்பாக்கம் ஒன்றியம், தண்டப்பந்தாங்கல், ஊ.ஒ.ந.பள்ளியில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்புமிகு.திருமதி. ஜோதி அவர்களால் வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டது. இச்சாதனை படைத்தோர் அக்கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் என்பதும், மேலும் நரசமங்கலம் ஆசிரியர் அடியேன் மற்றும் எனது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர் பயிற்றுநர். திரு.கார்த்திகேயன், தலைமையாசிரியர் திரு.உலகநாதன், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு வாழ்த்தி, பாராட்டினர். மேலும் மாணவிகளின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியை திருமதி.மஞ்சுளா அவர்களுக்கு எமது சாதனை குடும்பத்தின் சார்பில் சமுதாய சிற்பி என்ற விருதும் வழங்கப்பட்டது.
- கோகுலராஜ்,
58 உலக சாதனைகளை உருவாக்கிய ஆசிரியர்