பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.,)
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.,) வகுப்பை சேர்ந்த
மாணவர்களுக்கு, நேஷனல் பெல்லோஷிப் உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக
மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை
அல்லது கல்லூரிகளில், முழு நேரக் கல்வி முறையில் எம்.பில்., அல்லது
பிஎச்.டி., படிப்பில், அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல், பொறியியல்
மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில், பதிவு
செய்திருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: பாடப்பிரிவுக்கு ஏற்ப, 16 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
உதவித்தொகை எண்ணிக்கை: 300
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15
மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in







