HEALTH TIPS |KALVIKURAL.COM - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


HEALTH TIPS |KALVIKURAL.COM

: குங்குமப்பூ
# குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், மேனி பொலிவு பெறும்.
# குங்குமப்பூவைச் சாப்பிடுவதற்கும், குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
# நம் ஊர்களில் விற்கப்படுபவை பெரும்பாலும் தரம் குறைந்தவையே. குங்குமப்பூதான் இந்தியாவில் விலை உயர்ந்த பூ. காஷ்மீரில்தான் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.
# குங்குமப்பூ, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை ஆகியப் பிரச்னைகளைச் சரிசெய்யும். இனிப்புகளில் குங்குமப்பூச் சேர்த்துச் சாப்பிடலாம்.
# கர்ப்பிணிகள் குங்குமப்பூவைச் சாப்பிடுவதால், இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வலுவடையும்.
# சூடான பாலில் குங்குமப்பூவைக் கலந்ததும் நல்ல சிவப்பு நிறம் வந்தால், அது போலியான குங்குமப்பூ. பாலில் கலந்ததும், பல மணி நேரத்துக்கு பிறகு, தங்க நிறத்துக்கு மாறுவதே தரமான குங்குமப்பூ.
.

திப்பிலி

# திப்பிலி, இனிப்புச்சுவையும் காரத்தன்மையும் கலந்தது. உடல் சூட்டைத் தேக்கிவைக்க உதவும். திரிகடுகத்தில் திப்பிலி முக்கியமானது.

# திப்பிலி, சளியைப் போக்கும், குரல் வளத்தைப் பெருக்கும். மூக்கடைப்புப் பிரச்னையைச் சரிசெய்யும்.

# ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், திப்பிலிப் பொடி இரண்டு கிராம் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர குணம் கிடைக்கும். கோழை வெளியேறும்.

# குளிர் காலத்தில், திப்பிலி ரசம், திப்பிலிப் பால், திப்பிலிக் கஞ்சி போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம்.

# கண்டந்திப்பிலி வேர் மருத்துவக் குணம் நிறைந்தது. மாதவிடாய் காலத்தில் திப்பிலியை உணவில் சேர்த்துவர, சினைமுட்டை நன்றாக உருவாகும்.

# புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல், திப்பிலிக்கு உண்டு. தொடர்ந்து, திப்பிலியைச் சாப்பிட்டுவந்தால் எந்த நோயும் அண்டாது.
.

திரிகடுகம்

# திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த கூட்டுக் கலவை . சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்துக் கலந்து, திரிகடுகப் பொடியாகப் பயன்படுத்தலாம்.

# தலைவலி, பித்தம், வாந்தி ஆகிய பிரச்னைகள் நீங்கும். கோழை, சளி, ஆஸ்துமா பிரச்னைகளை திரிகடுகம் போக்கும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை உடலில் சமநிலைப்படுத்தும்.

# திரிகடுகத்தை டிகாக்‌ஷன் போல செய்துகொள்ளலாம். தண்ணீரில் திரிகடுகப் பொடியைப் போட்டு, சூடுபடுத்தி வடிகட்டி, டிகாக்‌ஷனைச் சேமித்துவைத்துகொள்ள வேண்டும். திரிகடுகம் டிகாக்‌ஷனை பாலில் ஊற்றி, சிறிது பனைவெல்லம் சேர்த்து, திரிகடுகம் பால் தினமும் அருந்தலாம்.

# திரிகடுகம் டிகாக்‌ஷன், ஒரு டம்ளர் தண்ணீர், பனை வெல்லம் ஆகியவற்றைக் கலந்து கொதிக்கவைத்து, ஆறவைத்துப் பருகினாலும் உடல் பலம் பெறும்.
.

இந்துப்பு

# இந்துப்புக்கு, சைந்தவம், பாறை உப்பு என்ற பெயர்களும் உள்ளன. இது, சற்று ஊதா நிறத்தில் இருக்கும்.

# மலக்கட்டை சரிசெய்யும் ஆற்றல் இந்துப்புக்கு உண்டு. வயிற்றில் உருவாகும் வாயுப் பிரச்னைகளையும் சரிசெய்யும். சிறுநீரைப் பெருக்கும்.

# இந்துப்பு 20 கிராம், சீரகம் 10 கிராம், ஓமம் 25 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 100 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சூரணம் போல செய்து மோரில் கலந்து குடிப்பது நலல்து.

# சுளுக்கு ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.

# உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்ற உப்பை உணவில் சேர்ப்பதைவிட, இந்துப்பை மிகச் சிறிதளவு சேர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் சோடியம் அளவு குறைவாக இருக்கும்.
.

கறிவேப்பிலை

# கறிவேப்பிலை, வாசனைக்கும் ருசிக்கும் மட்டும் சமையலில் பயன்படுத்தப்படுவது இல்லை. இதில், பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கின்றன.

# கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், மந்தம், மலக்கட்டு நீங்கும்.

# கறிவேப்பிலையுடன் சுட்ட உப்பு, புளி, வறுத்த மிளகாய், வறுத்த உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையலாகச் செய்து சாப்பிட்டுவர, கழிச்சல், பித்த வாந்தி குணமாகும்.

# கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வந்தாலும், கறிவேப்பிலைத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்து வந்தாலும், முடி நன்றாகக் கருகருவென வளரும்.

# பாதங்களைக் காக்கும்.

# ரத்த சோகையைத் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.                        
[4:46 PM, 8/24/2016] +91 98949 79670: எள்

‘# இளைச்சவனுக்கு எள்ளு’ என்பது பழமொழி, உடல் எடை கூட நினைப்பவர்களுக்கு எள்ளு சிறந்த தீர்வு.

# எள், கால்சியம் நிறைந்தது. பாலில் இருக்கும் கால்சியத்தைவிட, எள்ளில் இருக்கும் கால்சியம் மிக அதிகம். எலும்புகள் பலம் அடைய எள் சாதம் சாப்பிடலாம்.

# உடல் மெலிந்த குழந்தைகளுக்கு எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய் போன்றவை சாப்பிடக் கொடுக்கலாம். எள்ளில், மக்னீசியம் சத்து அதிக அளவு உள்ளது.

# எள்ளை அளவாகப் பயன்படுத்துவதே நல்லது. வெள்ளை எள்ளைவிட, கறுப்பு எள்தான் சிறந்தது.

# கல்லீரலைக் காப்பதில் முக்கியப் பங்கு எள்ளுக்கு உண்டு. எனவே, அனைவருமே எள் சாப்பிடலாம். எள்ளைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, இரவு நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.
.

வால் மிளகு

# வால் மிளகு குளிர்ச்சித்தன்மை கொண்டது. மேலும், இதைச் சாப்பிடும்போது நாக்கில் ஒரு விறுவிறுப்புத் தன்மையை உணர முடியும்.

# இரும்புச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து போன்றவை வால் மிளகில் அதிகம்.

# தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது.

# சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் வால்மிளகு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.

# தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், வால் மிளகை நெய் விட்டு வறுத்து, அரைத்துப் பொடித்து வைத்து, அரை தேக்கரண்டி வால் மிளகுப் பொடியை எடுத்துத் தேனில் குழைத்து, நன்றாகத் தொண்டையில் படுமாறு வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தொண்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும்.

# வாயுப் பிரச்னை உள்ளவர்கள், அல்சர் கோளாறு உள்ளவர்கள் வால் மிளகைக் குறைவாகப் பயன்படுத்துவதே நல்லது.
.

கடுக்காய்

# இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.

# கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் விளக்கினால், பல் உறுதியாகும். ஈறில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.

# 25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியை எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் குடித்துவந்தால், கண் நோய்கள் குணமாகும்.

# 20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைக்குச் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண் குணமாகும்.

# கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவைதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.
.

கல்பாசி

# கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

# கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச் சுவைகொண்டது.

# கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள்.

# கல்பாசிப்பூ, செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குணமாக்கும்.

# உடல் வெப்பத்தைக் கட்டுக்குள்வைக்கும். ஆன்டிபாக்டீரியல் மருந்தாகச் செயல்படுகிறது.

# சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். வெறுமனே கல்பாசியைச் சாப்பிடக் கூடாது. உணவுப்பொருளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
.

அதிமதுரம்

# தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும்.

# கப நோய்களைக் குணப்படுத்தும்.

# கண் நோய்கள் நீங்கும்,

# பார்வை தெளிவடையும்.

# வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் அதிமதுரம் சரி செய்யும்.

# வயிற்றுப்புண்களை ஆற்றும். ப்ராஸ்டேட் மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H