கொடுப்பவர் எவரோ அவரே நன்றியுடன் இருக்க வேண்டும். அது தான் உண்மையான உதவி செய்தமைக்கு அடையாளம்..
ஒருவர் ஒரு பரிசை மற்றவர்களிடம் இருந்து பெறுகிறார் என்றால், அது கொடுப்பவரை உலகிற்கு அறிமுகம் செய்யும் செயலாகும்..
அந்தப் பொருளைப் பெறுபவர் அதைப் பெறுவதற்கு மறுத்து இருக்கலாம். அவர் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதன் வழியாக அவர் கொடுப்பவரை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறார்.
கொடுப்பவர் எவரோ அவரே நன்றிக்கு உரியவனாக இருத்தல் வேண்டும்.இல்லையேல் அது உதவி செய்வது அல்ல, பேரம்.

ஜென் குரு டோஜோவின் மடாலயத்துக்கு ஒரு பணக்காரன் வந்து பத்தாயிரம் தங்க நாணயங்களை நன்கொடையாக அளித்தான்.
டோஜோ அந்த நன்கொடையை ஒன்றுமே சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.
அந்தப் பணக்காரனோ கடுமையாகத் தொந்தரவுக்கு உள்ளானான். “நான் கொடுத்த நன்கொடை பத்து ஆயிரம் தங்க நாணயங்கள் தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
டோஜோ தெரியுமென்று சொன்னார்.
“எனக்குக் கூட, பத்தாயிரம் தங்க நாணயங்கள் என்பது மிகவும் பெரிய தொகை தான். ஒரு நன்றியைத் தானே உங்களிடம் எதிர்பார்க்கிறேன். சொல்லக் கூடாதா?”
“நீயும் திரும்பத் திரும்பச் சொல்லி விட்டாய். நானும் கேட்டு விட்டேன். எனக்குக் காது கேட்கவில்லை என்று நினைத்தாயா? இல்லை, நான் உனக்கு நன்றியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்றார்.
“அதுபோதும்…அதுவே எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் பணக்காரர்.
“உனது தங்க நாணயங்களை நீ திரும்ப எடுத்துச் செல்லலாம். நீ உண்மையிலேயே ஆலயத்துக்குக் கொடையளிக்க விரும்பினால் நான் அந்த நன்கொடையை ஏற்றுக் கொண்டதற்கு நீ தான் நன்றியுடன் இருக்க வேண்டும்.” என்றார்
.டோஜோ குருவாக இருந்த அந்த ஆலயத்தில் இன்னும் அவை வாக்கியங்களாக எழுதப்பட்டுள்ளன.
ஆம்.,நண்பர்களே..,
கொடுப்பதற்குப் பலனை எதிர்பார்ப்பவரோ கொடையை விட மதிப்புமிக்க ஒன்றை எதிர்பார்க்கிறார்.
ஆம்.,யாருக்கும் உதவி செய்து நன்றியை எதிர்பார்க்காதீர்கள்,
"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்;
எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!