பள்ளி மாணவர்களுக்குஅறிவியல் திறனறித் தேர்வு ...
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.
இத்தேர்வை யாரெல்லாம் எழுதலாம்.
2) 50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
3) தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
4) தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும், தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ( அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்)
என்ன பயன்கள்:
1) 6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும்.
2) அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம் சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள �








