சென்னை: 'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண்
சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது.
இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல்,
வினியோகம் செய்யப்படுகிறது. 'தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள்
தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்
கொள்ளலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.