●'பயோ மெட்ரிக்' திட்டத்தை முறையாக அமலுக்கு கொண்டுவந்து, 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்கள் மீது, தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
●ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, புதிய பங்களிப்பு திட்டம் ரத்து செய்வது குறித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்
●தொடக்க பள்ளிகளில், ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க வேண்டும்
●10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்
●பொதுத் தேர்வுகளில், முறைகேடுகளை கட்டுப்படுத்த, தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்
●சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இணையாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற, திட்டம் வேண்டும்
●அரசு பள்ளி ஆசிரியர்கள், அடிக்கடி இடம் மாறுவதையும், அரசு நிகழ்ச்சிகள், அலுவலக பணிகளில் ஈடுபடுவதை தடுத்து, கற்றல் முறையை கண்காணிக்கும் திட்டம் கொண்டு வரவேண்டும்
●நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அதற்கான பொருட்களை கொள்முதல் செய்தலுக்கான, டெண்டர் போன்றவற்றில், வெளிப்படைத்தன்மை வேண்டும்
●திறமையான அதிகாரிகளை ஊக்குவிப்பதுடன், பதவி உயர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இப்படி, ஏராளமான பணிகள், புதிய அமைச்சர் முன் காத்திருக்கின்றன. புதிய அமைச்சர், சிறந்த கல்வியாளர் என்பதால், அவரே நேரடியாக, 'பைல்கள்' பார்த்து, முடிவெடுப்பார் என, ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.








