How to reduced your Belly within one month: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


How to reduced your Belly within one month:

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.


அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர் இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

பகிா்வு..எம்.விஜயன்....

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H