இதையொட்டி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டிட பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாக பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. மணி மண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து திட்டப்பணி ஒப்பந்ததாரர் ஜெகநாதன் கூறியதாவது:-
நாளை தொடங்கும் மணி மண்டப பணிகள், வருகிற 2017-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணிமண்டபத்தை திறந்து அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2-ம் கட்டப் பணியாக ரூ.35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.








