7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து அமைச்சரவைசெயலாளர் சம்பளம் மாதத்திற்கு ரூ.2.5 லட்சமாக உயர்கிறது. இதனையடுத்து, ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாநில கவர்னர்களின் மாத சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் சட்டத்தை தயாரித்துள்ளதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்படுகிறது.