தொடர்ந்து ஆறு மாதம் பகல், பின் ஆறு மாதம் தொடர்ந்து இருட்டு இப்படியிருக்கும் ஒரு வித்தியாசமான கண்டம்தான் இப்போதும் நாம் காணவி ருக்கும் அண்டார்டிகா கிரகம். அண்டார்டிகா- பெயரை கேட்டாலே ஒரு குளுமை உள்ளுக்குள் உணர்கிறீர்களா ,உலகின் அதிக குளுமையான கண்டம், அதிக உயரமான கண்டம், புயல்வேக காற்று அதிகமாக வீசும் இடம் என்று பல உலக சாதனைகளை கொண்டுள்ளது இந்த பனியால் மூடப்பட்டுள்ள வெண்ணிற கண்டம்.
வெள்ளை இரத்தம் உள்ள மீன்கள்„
அண்டார்டிகாவில் மிகக் குறைந்த அளவாக 89.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த குளிரில் சாதாரணமான உயிர்கள் வாழ முடியாது. இந்த குளிரை சமாளிக்கும் வகையில் இங்கு வாழும் மீன்களின் ஹீமோ குளோபின் அளவு மிகக் குறைவான அளவில் உள்ளது. குறைவான ஹீமோகுளோபின் இருப்பதால் இங்குள்ள மீன்களின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
புயலை தாண்டிய அமைதி„
அண்டார்டிகா செல்லும் வழியில் கடலில் பெரும் சீற்றத்துடன் குளிர்காற்று மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்த தனிமை யான கண்டத்தை அடைவது அத்துணை சுலபமல்ல. காலம் காலமாக இங்கு படிந்த பனிக்கட்டிகளால் குளிர் காலங் களில் 1 கோடியே பத்து இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் வரை பனிக்கட்டிகள் பரவியுள்ளன.
அண்டார்டிகா ஏன் குளுமையாக இருக்கிறது?
சூரியனின் வெப்பம் மத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் இடங்களை விட துருவப் பகுதிகளை அடைய அதிக தூரம் கடக்க வேண்டும். இதனால் சூரியனின் வெப்ப வீரியம் குறைந்திருப்பதால் இங்கு எப்போதும் குளிர் அதிகமாக உள்ளது. தற்போது இங்கு பார்க்கும் இடமெல்லாம் பனிக் கட்டிகளாக இருந்தாலும், பனிக்கட்டிகளின் அடியில் உள்ள மண்ணையும், அங்குள்ள பாசில் படிமங்களை யும் ஆராய்ந்ததில், ஒரு காலத்தில் இந்த இடத்தில் வெப்பம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
விண்வெளி ஆராய்ச்சி மையம்
சமீபத்திய ஆய்வின்படி அண்டார்டிகாவில் உள்ள தட்ப வெப்ப
நிலை செவ்வாய் கிரகத்தின் சூழலுக்கேற்ப தற்போது விண்வெளி செல்
லும் வீரர்கள் முதலில் அண்டார்டிகாவில் தங்கி தங்களை பழக்கி
கொள்கின்றனர்.








