தெலுங்கானாவில், மாணவர்களுக்கு, பாடங்கள் அனைத்தும் அடங்கிய, 'டேப்லட்'
வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானாவில்,
முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி
அமைந்துள்ளது. பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக, அனைத்து பாடங்களுடன் கூடிய
டேப்லட் கருவியை, மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு
உள்ளது. முதற்கட்டமாக, தலா, 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப்லட், 14 அரசு
உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த, 1,120 மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இன்டர்நெட்
வசதியுடன் கூடியது இந்த டேப்லட், படிப்படியாக அனைத்து அரசு பள்ளி
மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. பாடங்களுடன், அது தொடர்பான வீடியோக்கள்,
பல்வேறு பயிற்சி முறைகள் ஆகியவையும், இதில் இடம் பெற்றுள்ளன.







