பி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை
தீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக்
டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம்அறிவித்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
'பிரீடம்' என்ற, இந்த புதிய சலுகையை பெறுவதற்கு, 135 ரூபாய் கொடுத்து முதலில், 'ரீசார்ஜ்' செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள், உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகள், தரைவழி தொலைபேசி ஆகியவற்றிற்கு,
'பிரீடம்' என்ற, இந்த புதிய சலுகையை பெறுவதற்கு, 135 ரூபாய் கொடுத்து முதலில், 'ரீசார்ஜ்' செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள், உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகள், தரைவழி தொலைபேசி ஆகியவற்றிற்கு,
நிமிடத்திற்கு, 25 காசு
கட்டணத்தில் பேசலாம். இதில், மூன்று வகையாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
முதலில், 577 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், முழு டாக் டைம், 30 நாள்,
'வேலிடிட்டி' உடன் கூடிய ஒரு, 'ஜி.பி., இன்டர்நெட் டேட்டா' கிடைக்கும்.
இதுதவிர, 377 ரூபாய் மற்றும், 178 ரூபாய் ரீசார்ஜ் வசதிகளும் உள்ளன.
அவற்றில், இன்டர்நெட் டேட்டா அளவு, 300 எம்.பி., மற்றும், 200 எம்.பி., ஆக
இருக்கும். இந்த, பிரீடம் சலுகை, 730 நாட்கள் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...