ஆல் பாஸ்' வேண்டாம்; நிபுணர் குழு பரிந்துரை:
புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, 'ஆல் பாஸ்' என்ற, எட்டாம் வகுப்பு வரையில்
அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.
குறைந்து வரும் திறமை:
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையால், மாணவர்களின் திறமை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

189 பக்க அறிக்கை:
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது குறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில், 'ஆல் பாஸ்' முறையை கைவிட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஆராய்வு:
இதற்கிடையே,
மாநில பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர்கள் அடங்கிய,
மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், வரும், 25ல் நடக்க உள்ளது;
அதில், இந்த பரிந்துரைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...