இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
மும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.
நேரம் மிச்சம்
ஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, பொருள் வந்து சேர்கிறது.நாட்டில் பண்டிகை காலம் துவங்க உள்ளது. இம்மாததுவக்கத்தில், துர்கா பூஜையும், இறுதியில், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, மக்கள், பல புதுப் பொருட்களை வாங்குவர்
READ MORE CLICK HERE








