புதிய பாடத்திட்டம்புதிய பாடத்திட்டம் மாற்றம் குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-4 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது உண்டு. அதன்படி அண்ணாபல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல்கல்லூரிகள், அரசு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன.எனவே புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் அந்தந்த பாட நிபுணர்கள உள்ளனர். இதற்காக அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாட வாரியாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
வேலை வாய்ப்பு அளிக்கும்
உதாரணமாக மாணவர்கள் மெக்கானிக்கல் படித்தால் அவர்கள்விரும்பினால் சிவில் பாடத்தின் ஒரு பகுதியையும் எடுத்து படிக்கலாம். இந்த முறை புதிய பாடத்திட்டத்துடன் சேர்ந்து அமல்படுத்தப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் 2017-2018-ம் ஆண்டு அமல்படுத்தப்படும். அதாவது அந்த (2017-2018) வருடம் பி.இ. சேரும் மாணவர்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த புதிய பாடத்திட்டம் சிண்டிகேட், செனட் அனுமதி பெற்று அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.








