டிக்கெட் பரிசோதகர் வரலையா உடனே டயல் பண்ணுங்க...!
பரிசோதகர்கள் தாமதமாக வந்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்' என,
தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோட்டம் வாரியாக, புகாருக்கான எண்களும்
அறிவிக்கப்பட்டு உள்ளன. ரயில்களின் முன்பதிவு பெட்டிகளுக்கு, டிக்கெட்
பரிசோதகர்கள் உரிய நேரத்திற்கு வராவிட்டால், பயணிகளுக்கு பல்வேறு வகைகளில்,
சிரமங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற நேரங்களில், ரயில்வே சேவை மையத்தை, 138
என்ற எண்ணில், தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.மேலும், தெற்கு
ரயில்வே தலைமை வர்த்தக கட்டுப்பாடு அலுவலகத்திற்கு, 044 - 2535 0308; 90031
60995 என்ற எண்களிலும், சிறப்பு பணி தலைமை வர்த்தக மேலாளர்
அலுவலகத்திற்கு, 044 - 2535 4405 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என,
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.







