Teachers Salary -Court News: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Teachers Salary -Court News:

ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? - High Court

மதுரை: அரசு பள்ளிகளில் கழிப்பறை கோரிய வழக்கில், ஆசிரியர்களின் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை செயலரின் அறிக்கையை நிராகரித்தது. மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2014ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய
கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக பணிகள் நடக்கவில்லை. கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, பள்ளிகளில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதிகளை செய்து தர உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை இணைச்செயலர் நரேஷ் ஆஜராகி, செயலர் சபிதாவின் அறிக்கையை தாக்கல் செய்தார். இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், செயலரின் அறிக்கையில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் போதுமானதாக இல்லை. வணிக பயன்பாட்டு மின்சாரம் யூனிட் ரூ.5, பள்ளிக்கான கட்டணம் ரூ.5.75 என வசூலிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்ைட விட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள். இதை சரி செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஒதுக்கீடு செய்யும் நிதி போதுமானதாக இல்லாததால், ெபற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது. வேண்டுமானால் ஆசிரியர்களின் சம்பளத்தையும் மாணவர்களிடமே வசூலித்து கட்டலாமா?
நீதிமன்றத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களாமே. இந்த நீதிமன்றத்தில் எந்த அரசு அதிகாரியும் தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்.
செயலரின் அறிக்கையை படித்தால் எங்களுக்கு ேசார்வுதான் ஏற்படுகிறது. தகவல்கள் அனைத்தும் கற்பனையானதாக உள்ளது. உண்மைத்தன்மை இல்லை. படித்தால் கண்ணீர்தான் வருகிறது. பல பள்ளிகளில் போதிய கழிப்பறை இல்லாததால் மரத்தடியில் திறந்தவெளியில் செல்லும் நிலை உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டாகி விட்டது. சுதந்திர ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு நிலை இருக்கக்கூடாது. தமிழகத்தில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நடந்த விவாதம் வருமாறு: கூடுதல் அட்வகேட் ஜெனரல்: 28 லட்சத்து 25 ஆயிரத்து 764 பேர் படிக்கின்றனர்.
நீதிபதிகள்: 20 பேருக்கு ஒரு கழிப்பறை என பார்த்தால் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் வேண்டும். ஆனால், 66 ஆயிரத்து 610தான் உள்ளது. 50 % கழிப்பறைகள் கூட இல்லையே.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: 74 ஆயிரத்து 168 கழிப்பறைகள் கட்ட முடிவாகியுள்ளது. முதல் கட்டமாக 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: இதை எவ்வளவு காலத்தில் கட்டி முடிப்பீர்கள்? கூடுதல் அட்வகேட் ஜெனரல்: இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். நீதிபதிகள்: 2012ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் 6 மாதத்தில் நிறைவேற்ற கூறியுள்ளது. 2014ல் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை இதுவரை நிறைவேற்றவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இந்த மனு 2014லிருந்து நிலுவையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிக்கை அளித்துள்ளார். அதில், பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதி உள்ளதாக கூறியுள்ளார். இதன் அறிக்கையின் அடிப்படையில்தான், வக்கீல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தவறான தகவல்களை   கொடுத்துள்ளனர். பள்ளி கல்வித்துறை செயலர் தரப்பில் உறுதியான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதன்பின் விசாரணையை நவ.22க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H