பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது
பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன்
பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் வருகின்ற 7- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோளுக்கு ரிசோர்ஸ்சாட்-2ஏ ஏன பெயரிடப்பட்டுள்ளது.
ரிசோர்ஸ்சாட் – 2ஏ எனும் செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து
பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் மூலம் டிசம்பர் 7- ஆம் தேதி காலை 10.24
மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் 1235 கிலோ
எடையுள்ளதாகும். 18 நிமிடங்களுக்கு பிறகு செயற்கைக்கோளானது 817 கிமீ
தொலைவில் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
ரிசோர்ஸ்சாட் – 2ஏ செயற்கைக்கோள் ரிமோட்
சென்சிங் செயற்கோளாகும். பூமியின் மூன்று அடுக்குகளையும் படம் பிடிக்க
இதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, 200 ஜிபி அளவுள்ள
ரெக்கார்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெக்கார்டில் கேமராவில்
பிடிக்கப்படும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.







