அதே நேரத்தில், துணைவேந்தரின்றி பட்டமளிப்பு விழா நடத்த, உயர் கல்வித்துறை மற்றும் சென்னை பல்கலை அதிகாரிகள், இரண்டு முறை முயற்சித்தனர். கவர்னரின் பங்கேற்பு தேதி கிடைத்தது. ஆனால், பல தரப்பிலும் எதிர்ப்பு வந்ததால் பட்டமளிப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. பதவி கேட்டோர், விண்ணப்பித்தோர், தகுதி பெற்றோர், சிபாரிசு பெற்றோர் என, பல வகையிலும், பதவிக்கு போட்டி போடுவோரின் பெயர்கள் பரிசீலிக்கப் படுகின்றன. கவர்னருக்கு அனுப்ப உள்ள இறுதி பட்டியலில், மூன்று பேர் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும். இது குறித்து, வரும், 23ல் தேடல் குழுவின் ஆலோசனை நடக்கிறது. இதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, துணைவேந்தர் யார் என இறுதி செய்யப்படும் என, உயர் கல்வி வட்டாரங்கள்








