தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு சுமார் 800 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:‘‘இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் அம்மா கிட்ஸ் எனப்படும் கணிதம் மற்றும் அறிவியலுக்கான உபகரணங்கள் வழங்கப்படும். காமராஜருக்கு அடுத்து ஜெயலலிதா ஆட்சியில்தான் 99 சதவிகிதம் அரசு உதவி பெறும் பள்ளிகளைஉருவாக்கி இதுபோன்ற உதவிகள் செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.








