மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்குமா?
ஜல்லிக்கட்டு
நடத்த ஏதுவாக, அவசர சட்டத்தை,
மத்திய அரசு பிறப்பிக்க
வேண்டும்
என, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி
என, அனைத்து கட்சிகளும் மத்திய
அரசை வலியுறுத்தி விட்டன. மாணவர்களும், இதே
கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஆனால்,
அவசர சட்டம் பிறப்பிக்க முடியுமா
என்பது, மில்லியன் டாலர் கேள்வியே!
காட்சிப்படுத்த
தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து, காளையை நீக்காமல், ஜல்லிக்கட்டு
மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களுக்காக,
காளைகளை பயன்படுத்தும் வகையில், மத்திய அரசு ஓர்
அறிவிப்பாணையை, 2016, ஜன., 7ல் வெளியிட்டது.
அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அவசர
வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெறப்பட்டது.
தள்ளிவைப்பு
ஜல்லிக்கட்டு
தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற
நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ரோஹின்டன்
நாரிமன் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரித்தது. இரு
தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள், 2016 டிசம்பர் 7ல், முடிந்த நிலை
யில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி
வைத்தது.மாவட்ட நீதிமன்றங்கள், மாஜிஸ்தி
ரேட், சிவில் நீதிமன்றங்கள் என,
கீழ் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, ஒரு வழக்கில் விசாரணை
முடிந்து, தீர்ப்பு தள்ளி
வைக்கப்பட்டால்,
ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த
கால வரையறை, உயர் நீதிமன்றம்
மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு கிடையாது.
தீர்ப்பை
உடனடியாக வழங்க வேண்டும் என,
உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில்
யாரும் கோர முடியாது. ஒவ்வொரு
வழக்கிலும், அதன் தன்மை, வழக்கறிஞர்களின்
வாதங்கள், உச்ச நீதிமன்றதீர்ப்புகள், சட்டப் பிரச்னைகள்
என, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த
பின் தான், தீர்ப்பு வழங்க
முடியும்.
அதுவும்,
ஜல்லிக்கட்டு வழக்கைப் பொறுத்தவரை, விரிவான உத்தரவாக பிறப்பிக்க
வேண்டியது இருக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற ரீதியில், உத்தரவு
பிறப்பிக்க முடியாது. ஏனென்றால் இது, இடைக்கால உத்தரவு
அல்ல. எனவே, தீர்ப்பு வழங்குவதற்கு
கால அவகாசம் எடுக்கப்படுகிறது.
தடை உத்தரவு
மறைந்த
முதல்வர், ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து
குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில்,
விசாரணை
முடிந்து, ஆறு மாதங்கள் ஆகி
விட்டன. தீர்ப்பு எப்போது வரும் என்ற
எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அப்படி இருக்கும் போது, ஜல்லிக்கட்டு வழக்கில்
மட்டும், உடனடி யாக தீர்ப்பை
வழங்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது.ஒரு வழக்கில் விசாரணை
முடிந்து, தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அவசர சட்டத்தை கொண்டு
வருவது, முறையாக இருக்காதுஎன்பதே சட்ட
நிபுணர்களின் கருத்து.
அவ்வாறு,
அவசர சட்டம் கொண்டு வந்தால்,
நிலுவையில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி,
தடை உத்தரவு பெறுவதில், 'பீட்டா'வுக்கு சிரமம் இருக்காது.ஜல்லிக்கட்டு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் எத்தகைய
நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பது
தான், அனைவர் மத்தியிலும்
Advertisement
எழுந்துள்ள
எதிர்பார்ப்பு. எனவே, உச்ச நீதி
மன்றத்தின் முடிவு தெரியாமல், அவசர
சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்குமா
என்பது மிகப்பெரிய கேள்வி.
ஜல்லிக்கட்டுக்கு
எதிராக, உச்ச நீதிமன்ற உத்தரவு
இருக்கும் என, யூகத்தின் அடிப்படை
யில், மத்திய அரசு முடிவெடுக்க
முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை
என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை,
மத்திய அரசு எடுக்கலாம்.
காட்சிப்படுத்த
தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து, காளையை நீக்கும் வகையில்,
மிருக வதை தடுப்பு சட்டத்தில்
உரிய திருத்தம் கொண்டு வர, மத்திய
அரசு நடவடிக்கை எடுக்கலாம். பாரம்பரிய, கலாசார விளையாட் டான
ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற
வற்றை பாதுகாக்கும் வகையில், தனியாகவும் சட்டம் கொண்டு வரலாம்.
எனவே, உச்ச நீதிமன்றம், தன்
முடிவை தெரிவிக்காத நிலையில், அவசர சட்டத்தை கொண்டு
வந்தால், அது, தற்போதைய சூழ்நிலையை
சமாளிக்க வேண்டுமானால் பயன்படலாம்; ஆனால், நிரந்தர தீர்வாக
இருக்காது என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.