விரைவில் புதிய 1000 ரூபாய் வெளியீடு!
மத்திய அரசு கடந்த நவம்பரில், நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது. இதற்கு மாற்றாக புதிய 500
மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்,
பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லை என மத்திய நிதித்துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புதிய 1000 ரூபாய் நோட்டு படங்கள் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘புதிய 500 மற்றும் 2000
ரூபாய் வடிவமைப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய்
நோட்டு விரைவில் வெளியில் வர உள்ளது. கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாத
வகையில் இந்த புதிய 1000 ரூபாய் நோட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய்
நோட்டு வெளியானதும், 2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக திரும்ப பெறவும்
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், இது பற்றி இன்னும் மத்திய அரசு
முடிவெடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
மத்திய அரசு விரைவில்
புதிய ஆயிரம் ரூபாய் வெளியிடும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு, மத்திய அரசு
அறிவித்தது. அதன்பின், இப்போதைக்கு புதிய ஆயிரம் ரூபாய் வெளியிடப்படாது என
அறிவித்தது. இந்நிலையில், மீண்டும் புதிய ஆயிரம் ரூபாய் வெளியாக உள்ளதாக
செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும், இது குறித்து உறுதியான
அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் புதிய 1000 ரூபாய் நோட்டுகள்
வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் மார்ச் மாதத்திற்கு
பிறகே வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி
முழுமையாக தளர்த்தவும் வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.