
அதன்படி பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தேர்வு மார்ச் 10-ந்தேதி நடப்பதாக இருந்தது. அந்த தேர்வு 8 நாள் கழித்து 18-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருங் மொழித் தேர்வு மார்ச் 23-ந்தேதிக்குப் பதில் மார்ச் 10-ந்தேதி நடைபெறும் எனவும், என்.சி.சி. தேர்வு மார்ச் 15-ந்தேதிக்குப் பதில் 23-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில்
இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து
ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper)
ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட
தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல்
29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் தேர்வுக்கும், இணை நுழைவுத்தேர்வு 2017-ற்கும் இடையில் குறுகிய
இடைவெளிதான் உள்ளது. இதனால் தேர்வின் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று
பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், சி.பி.எஸ்.இ. தேர்வில் இதுகுறித்து
மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்தியா முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420
மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வையும், 16 லட்சத்து 67 ஆயிரத்து 573
மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுத இருக்கிறார்கள்.