பொங்கலுக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்பவரா நீங்கள்?
பேருந்துகள் எங்கிருந்து புறப்படுகின்றன குறித்த முழு தகவல்கள்*
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்காக 11270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :
ஜனவரி 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, 11.01.2017, 12.01.2017 மற்றும் 13.01.2017 ஆகிய நாட்களில் பயணிகள் ஏறும் இடங்கள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மாற்றியமைத்து செயல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டுநர்கள் இப்போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளியூர் பேருந்து நிலையங்கள்பேருந்துகள் எங்கிருந்து புறப்படுகின்றன குறித்த முழு தகவல்கள்*
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்காக 11270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :
ஜனவரி 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, 11.01.2017, 12.01.2017 மற்றும் 13.01.2017 ஆகிய நாட்களில் பயணிகள் ஏறும் இடங்கள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு மாற்றியமைத்து செயல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டுநர்கள் இப்போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. ஆந்திரா செல்லும் பேருந்துகள் : செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு) இல் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
2. ECR (கிழக்கு கடற்கரை சாலை ) வழியாக இயக்கப்படும் பேருந்துகள் : கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் அடையாறு காந்திநகரில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
3.விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள் : திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் (SETC உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (MEPZ)-ல் இருந்து புறப்படும்.
4.வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் : பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேற்கண்ட நான்கு தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு 11,12,13.01.2017 தேதிகளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் 11.01.2017 முதல் 13.01.2017 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்தடப் பகுதிகளில் பயணம் செய்ய உள்ள பிற பயணிகளும் அந்தந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5.கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் : இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்).
II வழித்தட மாற்றங்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை (OUTER RING ROAD) வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
III கார் மற்றும் இதர வாகனங்கள் :
11.01.2017 முதல் 13.01.2017 வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IV இணைப்பு பேருந்துகள்
அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும். சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2275 பேருந்துகளுடன் கூடுதலாக 11.01.2017 அன்று 794 சிறப்பு பேருந்துகள், 12.01.2017 அன்று 1779 சிறப்புப் பேருந்துகள், 13.01.2017 அன்று 1872 சிறப்பு பேருந்துகள் என 11.01.2017 முதல் 13.01.2017 வரை மொத்தம் 4445 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும். ஆக ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து 11270 பேருந்துகள் இயக்கப்படும்.மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 11.01.2017 அன்று 991 சிறப்பு பேருந்துகள், 12.01.2017 அன்று 2291 சிறப்பு பேருந்துகள், 13.01.2017 அன்று 3141 சிறப்பு பேருந்துகள் என 11.01.2017 முதல் 13.01.2017 வரை 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044- 24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.