ஜியோவின் அடுத்த அதிரடி : ரூ.999 - ரூ.1,500/-க்கு 4ஜி ஸ்மார்டபோன்.!
பல தொலைத்தொடர்பு புரட்சிகளை இந்திய சந்தையில் நடத்திய
ரிலையன்ஸ் ஜியோ அதன் அடுத்த
சந்தை புரட்சிக்கான
நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. அதாவது, ரூ.1500/-க்கும்
குறைவான விலையில் 4ஜி வோல்ட் அம்சம்
கொண்ட 4ஜி கருவிகளை அறிமுகம்
செய்யவுள்ளது.
இந்திய
தொலைத்தொடர்புத் துறையின் ஒரு கேம் சேஞ்சர்
ஆக திகழும் ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி
இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/-
என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான
4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற
விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள்
குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ்
ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.







