The Heart of Teaching: What It Means to Be a Great Teacher !!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


The Heart of Teaching: What It Means to Be a Great Teacher !!!

இன்று ஆசிரியர் / அரசு ஆசிரியர் பற்றிய ஒரு வாட்சப் பதிவு படிக்க நேர்ந்தது , அந்த பதிவு பற்றிய வெளிப்பாடுதான் இது ....
ஆசிரியர் யார்? ஆசிரியர் பணி என்பது என்ன?
அன்பை தருவது தாய் , அறிவை தருவது தந்தை என்றால் இந்த இரண்டையும் ஒருசேரத்தரும் தாயுமானவர்.. ஆசிரியர், ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவேதான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர்.
ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன6 மணிநேர கால்கடுக்கும் வேலையாள் - வெரிகோஸ் வியாதிவந்தவர்கள்.
சாக் பீஸ் துகள்களால் – ஆஸ்துமாவந்தவர்கள்
வேண்டாம் என்றாலும் ,தேர்தல் ஆணையத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு , அரசியல்வாதிகளால்  துன்பம் அனுபிவித்தவர்கள்,

கோடை காலத்தை பிள்ளைகளுடன் அனுபவிக்கமுடியாமல் ,முழுஆண்டு தேர்வு ,10 -ம் /12 -ம் வகுப்பு தாள் திருத்தும் ஆசிரியர்கள், இன்னும் பல  படும் துன்பம் பற்றி ,

எத்தனை சவால்களை, சிரமங்களை, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டாலும், போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும் இவை அனைத்தின் மத்தியிலும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆசிரியர் பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள்.

நம்மை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஏணி, ஆசிரியர் மட்டுமே!
ஆசிரியர்கள் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டிய ஏணிகள்

உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா?
ஒரு மாணவராக அல்லது பெற்றோராக, ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா? அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா?

லட்சங்கள் தனியார் பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு கொடுத்து, லட்சியம் இல்லாமல் தனியாருக்கு மாடாய் உழைக்கும்,அதே லட்சங்களை லஞ்சம் மூலம் பெரும் நாம் , பெற்ற அறிவை ஏருக்கேனும் ஒருநாள் ஆசிரியராய் இருந்து புகட்டி இருக்கின்றோமா?

வெட்டியாக  வாட்சப்பில் வந்த  தகவலை வைத்து  ஆசிரியர் பற்றியோ  , அரசு ஆசிரியர் பற்றி விமரிசித்து பேச ஏ சி அறையில் வாழும் நமக்கு என்ன தகுதி இருக்கின்றது??????

ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை…..

யோசியுங்கள்
நமக்கு இருக்கின்றதா இந்த தகுதியும் , தன்மையும் 
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகள் செய்கிறோம் என்பதை கீழே உள்ள துண்டுத் தாளில் எழுதியுள்ள நபர் புரிந்து கொள்ளவே இப்பதிவை பதிவிடுகிறேன், இவரைப் போல எண்ணம், சிந்தனை கொண்டவர்கள் இனியாவது அரசுப்பள்ளி ஆசிரியர்களை நேர்மறை நோக்குடன் பாருங்கள்,நம்  நல்ல எண்ணம் தான் நம் உயர்வுக்கு வழி கொடுக்கும். நாங்கள் எங்கள் கடமைகளின் பொறுப்புணர்ந்து தான் செயல்படுகிறோம், எங்களுக்கு உரிய விடுப்புகளையே நாங்கள் அதிகம் எடுப்பதில்லை, உங்களுக்கென்னத் தெரியும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்,


அரசுப் பள்ளிகளும் ஆசிரியர்கள் வேலைகளும்,

ஒழுக்கம்

கல்வி

உயர்வு

 என்னும் குறிக்கோளுடன் மாணவ/மாணவியர்கள் செயல்பட கல்வி சார்ந்த செயல்பாடுகள் பல வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது,

காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும்
கால அட்டவணை முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

 காலை வழிபாட்டுக் கூட்டம் மூலமாக
(ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை மட்டும் கொடி ஏற்றத்துடன் கூடிய அனைத்து வகுப்புகளும் இணைந்து செயல்படும்.
பொது வழிபாட்டுக் கூட்டம்),

 செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அவரவர் வகுப்பறையில்  வகுப்பறை வழிபாட்டுக் கூட்டம் (தனித்தனியாக)நடத்தப்படுகிறது.

வழிபாட்டு கூட்டம் நிகழ்வுகள்:(மாணவர் செயல்பாடு)

1. தமிழ்த்தாய் வாழ்த்து

2. கொடி ஏற்றுதல் (ஆ செ)

3. கொடிப்பாடல்

4. திருக்குறள் மற்றும்
    விளக்கம்

5. செய்தித்தாள் வாசித்தல்
    ( தமிழ் மற்றும் English)

6. இன்றைய சிந்தனை

7. ஆன்மீகச் சிந்தனை

8. பொது அறிவு

9. பழமொழி

10. பொன்மொழி

11. விடுகதை

12. மனக்கணக்கு

13. பிறந்த நாள் வாழ்த்து

14. ஆசிரியர் உரை (ஆ செ)

15. தலைமை ஆசிரியர்  உரை (த ஆ செ)

16. நாட்டுப்பண் (மாலை)

காலை வழிபாட்டுக் கூட்டம் முடிந்ததும் தினமும் ஒரு பயிற்சியை தியானம், யோகா கற்றுக் கொடுக்கிறோம்.

 தியானம்பயிற்சி :

1. வாழ்த்துப்பயிற்சி

2. தன் வாழ்த்துப்பயிற்சி

3. பண்பாட்டுப் பயிற்சி

4. மழை வாழ்த்துப் பயிற்சி

5. வண்ணப் பயிற்சி

6. எண்ணிக்கைப் பயிற்சி

7. உலக அமைதி பயிற்சி என பல பயிற்சிகளை கற்றுக் கொடுக்கிறோம்,

கல்வி இணைச் செயல்பாடுகளான:

1. வாழ்க்கைத் திறன்கள்

2. நன்னலம், யோகா, முழு உடற்பயிற்சி

3. மனப்பான்மையும், மதிப்புகளும்

4. பாட இணைச் செயல்பாடுகளும்

   அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறோம். இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதிவேடுகள் பராமரிக்கின்றோம்.

மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறைகள், கற்கும் மாணவர்கள்:

 முதலாம் வகுப்பு முதல் நான்காம்  ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள்  (SABL System) எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல்,

5  ஆம் வகுப்பு மாணவ / மாணவியர் (SALM) எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி,

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவியர் ( ALM) படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பிக்கப்படுகிறது.

மாணவர்களின் கற்றல் அடைவு நிலையினை
CCE- தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என ஒவ்வொரு மாணவ/மாணவியரின் கற்றல் அடைவு நிலையினைக் குறித்து தனித்தனியே கண்டறியப்படுகிறது.

அரசு வழங்கும் விலையில்லா நலத்திட்டங்கள்: ( குழந்தைகளின் நலன் கருதி அவரவர் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான முப்பருவ பாட நூல், முப்பருவ கையேடு,காலணி, சீருடை, வண்ணப் பென்சில்கள் என அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்பவர்களும் ஆசிரியர்களே)

1. முப்பருவ பாட நூல் வழங்கி அனைத்து மாணவர்களிடம் கையொப்பம் பெறுதல்

2.முப்பருவ கையேடு வழங்கி கையொப்பம் பெறுதல்

3. சீருடை 4 Set வருடத்திற்கு (மதிய உணவு உண்பவர்களுக்கு) வழங்கி கையொப்பம் பெறுதல்

4. காலணி வழங்கி கையொப்பம் பெறுதல்

5. வண்ணப் பென்சில்கள் வழங்கி கையொப்பம் பெறுதல்

6. வரைபடம் வழங்கி கையொப்பம் பெறுதல்

7. ஜாமன்றிபாக்ஸ் வழங்கி கையொப்பம் பெறுதல்

8. பெண்கல்வி ஊக்குவிப்பு  உதவி தொகை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு வழங்கி கையொப்பம் பெறுதல், வங்கிக் கணக்குத் துவங்கி கொடுத்தல்.

9. அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு, மாற்றுத்திறனாளர் உதவித் தொகையை சமூக நலத்துறை மூலமாக பெற்று தருதல்.

10. சிறுபான்மையினர் உதவித் தொகை பெற்றுத் தருதல்

11. கண் கண்ணாடி ( அரசு மருத்துவமனை மருத்துவர்களால் மாணவர்களின் பரிசோதனை செய்யப்பட்டு தரமான கண் கண்ணாடி பெற்றுத் தருதல்

12. சதுரங்கப் பலகை விளையாட்டை மாணவர்களிடம் ஊக்கம் ஏற்படுத்தி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் போட்டிக்கு அனுப்புதல்

13. கணித உபகரணம் தானே கற்றலுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துதல்,,

 ஆங்கில வழிப்  பள்ளிக்கு இணையாக இங்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது,

1. நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான  தனித்தனி வகுப்பறைகள்

2. சுத்தமான குடிநீர் வசதி ( Ro System Big Size )

3.மாணவ / மாணவியர்களுக்கு என தனித்தனி கழிப்பிடவசதி, மாணவியர்களுக்கு கழிப்பறைகளிலேயே  நேப்கின் எடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது,

4. நூலக வசதி

5. கணினி வகுப்பறை

6. தொலைக்காட்சி வகுப்பறை

7. Smart Class வகுப்பறை

8. அறிவியல் ஆய்வகம்

9. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பாலவி காஷ் குழு பள்ளிக்கு வந்து நன்னெறி கல்வியை சேவை மனப்பான்மையுடன்  வழங்கி வருகிறார்கள்

10. கராத்தே மாஸ்டர் மாதத்திற்கு 4 முறை  கராத்தே கற்றுக்  கொடுக்கிறார்

11. தமிழ் இலக்கிய மன்றம்

12. அறிவியல் மன்றம்

13. கணித மன்றம்

14. ஆசிரியர் பயிற்சி பெற்று, முதுகலைப் பட்டம் பெற்ற சிறந்த ஆசிரியர்கள்

15. தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் போட்டிகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல்

16. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாணவர்களின், பன்முகத் திறன் வெளிப்படுத்தும்
நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின்  தனித்திறன் மற்றும் தன்னம்பிக்கை வலுப்படுத்துதல்

17. பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் பள்ளியின் ஆணி வேர் போன்று செயல்படுகிறது

18. பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு Pg Trust உதவி செய்து வருகிறது

19. தேசிய விழாக்கள், சமய விழாக்கள் கொண்டாடுதல்

20. பல்வேறு போட்டிகள் நடத்துதல்

21. மாற்றுத்திறனாளர் குழந்தைகளை தனித்து ஒதுக்காமல் அவர்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி கற்றுக் கொடுத்தல்

22. கணித உபகரணம் கொண்டு கணக்குகள் செய்ய ஊக்குவித்தல்

23. கல்விச் சுற்றுலா வாக களப்பயணம் அழைத்துச் செல்லுதல்

24. ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துதல்

25. ஒவ்வொரு மாணவ/மாணவியர்களுக்கும் விலையில்லா மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது

26. சுற்றுச்சூழல் மன்றம்

27. சுண்ணக்கட்டிகள்
 தயாரித்தல் மற்றும் கைத்தொழில் (வாழ்க்கை மையக் கல்வியும் )கற்றுத் தரப்படுகிறது

28. வகுப்பில் 100% வருகை, முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்குதல்

29. சாரணர் இயக்கம் செயல்பட்டு வருகிறது, முதலுதவி இயக்கமும் செயல்படுகிறது

30. பள்ளி வளாகம், வகுப்பறை தூய்மை, தன் சுத்தம், சுற்றுப்புற தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது

 31. ஒவ்வொரு மாணவ/மாணவியர்கள் பற்றிய சுய விபரங்களை EMIS இல்  பதிவு செய்துள்ளோம்

32. தமிழக அரசு நடைமுறை படுத்தி வரும் வாரத்திற்கு ஐந்து நாள் முட்டையுடன் கூடிய கலவை சாதம் வழங்கி வருகிறோம்

 33. அறிவியல் பரிசோதனையை மாணவர்கள் செய்முறைகளின் மூலம் செய்து  நேரடி அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்

34. அரசு ஆணைப்படி 1 முதல் 14 வயது உடைய மாணவ/மாணவியர்களை வயதிற்கேற்ற வகுப்பிலும், இடை நின்ற மாணவர்களையும் கல்வி கற்க ஊக்குவிக்கின்றோம்

35. அரசுப் பள்ளியில்  படித்த மாணவ / மாணவியர்கள் இன்று இந்தியாவில் மட்டும் இன்றி பல நாடுகளிலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர்ந்த பதவியில் உள்ளனர்.

மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டு ஆசிரியர்கள் அனைவரும்  கல்வி பணி ஆற்றி வருகிறோம்.

அரசு வழங்கும் அனைத்து விலையில்லா  நலத்திட்டங்களையும் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கி வருகிறோம்.

1. தமிழ் வழிக் கல்வி

2. ஆங்கில வழிக் கல்வி

இரண்டு வழிக் கல்வி முறைக்கு கட்டணம் எதுவும் அரசுப் பள்ளியில்  நாங்கள் வசூலிப்பது இல்லை அனைத்து வகையான நன்கொடைகளையும்  விலையில்லாமல் வழங்குகிறோம்

ஆசிரியர்களாகிய எங்களுக்கு மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்த SCERT, CEO, DEO, AAEEO,SSA மூலம் பல்வேறு கட்டப் பணியிடைப் பயிற்சியை வழங்குகிறார்கள், மாணவர்களுக்கு வகுப்பறையில் நிகழ்வாகப் பயிற்சியில் பெற்ற தகவல்களைக் கூறியும்,

1.தமிழ் வாசித்தல், எழுதுதல்

2.ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல்

3.எளிய கணக்குகள், கடினமான கணக்குகள் செய்தல்

போன்ற செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்,

கல்விப் பணியுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள் எதுவாகினும் ஆசிரியர்கள் தான் செய்கிறோம்,

ஆசிரியர்கள் என்னென்ன பணி செய்கிறார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாமல் தேவையின்றி கீழே குறிப்பிட்டுள்ள வாசகங்களைத் தவிர்ப்பது நல்லது,

நான் அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பாகவும் இவற்றை பதிவு செய்கிறேன்.யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை இப்பதிவு, இனியாவது அரசுப் பள்ளி ஆசிரியர் என்றால் நல்ல  சம்பளம் மட்டுமே வாங்குகிறார்கள், வேலை எதுவும் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள், எங்களிடம் கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களின் நலனுக்காக உருகும்  மெழுகுவர்த்தியாகத்தான் அன்றாடம் எங்கள் பணியை செய்கிறோம், எனவே சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நாங்கள் செய்யும் வேலைகளையும் கருத்திற் கொள்ளுங்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H