10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும்; ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை புழக்கத்தில்
விடுகிறது. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். எனவே,
வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்தில் இருக்க
வாய்ப்பு உண்டு.
இதில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவென்றால், 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணமாக 10 ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகக் கூடியவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவை.
அதிகமாக விவரங்களை அறியாத சிலர், நாட்டின் சில பகுதிகளில், இத்தகு நாணயங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை சாதாரண மனிதர்கள் (சிறு வியாபாரிகள் உள்பட) மனதில் உருவாக்கி, இந்த நாணயங்களின் புழக்கத்திற்கு குந்தகம் விளைவித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த குழப்பம், சந்தேகம் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
எனவே, பொதுமக்கள் இந்த நாணயங்களை தங்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தயக்கமின்றி பயன்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.