TNPSC - சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு பிப்., 14 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
'வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு, பிப்., 14 முதல் சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவ சார்நிலைப் பணியில், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான
எழுத்துத் தேர்வு, ஜூன் 5ல் நடந்தது. அதில், 4,270 பேர் பங்கேற்றனர்.
இதில், தேர்வர்களின் மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி அடிப்படையில், 223
பேர் தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, பிப்., 14, 15ல், தேர்வாணையஅலுவலகத்தில்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இதற்கான விபரங்கள், www.tnpsc.gov.in
என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.