நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூடுகிறது:
அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வராக பதவி
ஏற்றுக் கொண்டார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அழைப்பு விடுத்த ஆளுநர் வித்யாசாகர், இன்னும் 15 நாட்களுக்குள்
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி
முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறினார்.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை (18-ந்தேதி) காலை 11 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது. முதல்வர் பழனிச்சாமி தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இது சிறப்பு சட்டப்பேரவை கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.