பான் கார்டு பெற, வரி செலுத்த புதிய ஆப்: வருமான வரித்துறை மும்முரம்:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய வருமான வரித்துறை புதிய
ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. ஸ்மார்ட்போன்களில் செயல்படக் கூடிய புதிய
ஆப் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) மற்றும் வரி
செலுத்துவோர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்
எண் சார்ந்து e-KYC அங்கீகாரத்தை பயன்படுத்தி சில நிமிடங்களிலேயே வருமான
வரித்துறை நிரந்தர கணக்கு எண் வழங்கவும் வருமான வரித்துறை பணியாற்றி
வருகிறது. இதன் மூலம் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் பெறுவது
எளிமையானதாகி விடும்.
தற்சமயம் துவக்க
பணிகளில் இருக்கும் இந்த ஆப், ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதை எளிமையாக்கி
விடுவதோடு வருமான வரி விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். புதிய ஆப்
உருவாக்குவதற்கான திட்டங்கள் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்றபின்
துவங்கப்படும் என வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை நிரந்தர
கணக்கு எண் பெற e-KYC அங்கீகார வழிமுறையை பின்பற்றுவதன் மூலம்
வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் அனைத்து தகவல்களையும் சரியாக உள்ளதா
என்பதை சரிபார்த்து கொள்ள முடியும். இதனால் எவ்வித பிழையும் இன்றி வருமான
வரித்துறை நிரந்தர கணக்கு எண்ணை பெறலாம்.
நாடு
முழுக்க இதுவரை சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரத்தியேக எண் பயன்படுத்தி புதிய சிம் கார்டு வாங்குவது, வங்கி
கணக்கு பயன்பாடு, மானியங்களை பரிமாற்றம் செய்வது, ஆதார் சார்ந்த பண
பரிமாற்றங்களை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.