கார்ட்டூன் பார்ப்பதால் திசைமாறும் குழந்தைகளின் மனநிலை

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி
விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில்
தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச்
செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர். நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில்
ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும்
எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக
பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது,
குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை.
புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது;
கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.
Reade more Click Here