அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’
என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதன் அவசியத்தை
வலியுறுத்துகின்றன.ஓர் நடத்தையை அதிகப்படுத்த வேண்டுமெனில் வலிமையூட்டிகளை (Reinforcement) பயன்படுத்த வேண்டும். பரிசு, பாராட்டு, மகிழ்ச்சியான முகபாவனை, அன்பு, அரவணைப்பு ஆகியவைகளை வலிமையூட்டிகள் எனலாம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இவற்றை அளிக்கும்போது எந்தவொரு நடத்தையையும் அதிகப்படுத்தலாம்.
நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு அடி அடித்துவிட்டால், ஒரு முறை சூடு போட்டு விட்டால் அதன் பின்னர் அது பற்றிய பயம் சுத்தமாக இல்லாமல் போய்விடும் எனவே ‘அடித்து விடுவேன்’, ‘உதைத்துவிடுவேன்’, ‘சூடுவைத்து விடுவேன்’ என வாயளவில் மிரட்டலாமே தவிர ஒருபோதும் அவற்றை செய்து விடக்கூடாது. மிரட்டிக் கொண்டிருக்கின்ற வரை பயமுறுத்திக் கொண்டு இருக்கலாம். மேலும் மிரட்டுவதே அதிகப்பட்சம்
தண்டனை கொடுக்கக்கூடாது என்ற நிலையில் எதிர்மறை நடத்தைகளை குறைக்க நடத்தைக் குறைப்புகளே சிறந்த வழி. அத்தகைய நடத்தை குறைப்புகளில் பாராட்டாமல் விடுதல், வாய் திறந்து நேரிடையாக நீ செய்வது தவறு என கூறுவது ஆகிய இரண்டும்தான் உளவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரண்டுமே மிகச் சிறந்த முறையில் கெட்ட நடத்தைகளை குறைக்கின்றன என்பது உளவியல் ஆய்வு முடிவு.
பெரியவர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு. அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.








