Jio இலவச சேவை இன்று மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவு. ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை என்ன?
கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச சேவை இன்று மார்ச் 31-ம்
தேதியுடன் நிறைவடைவதையொட்டி ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண சேவைக்கு
மாறுவதற்கு முன்பாக ரூ.99 கட்டணத்தில் ரீசார்ச் செய்யும்பொழுது அடுத்த
ஆண்டு மார்ச் 31 வரை ஜியோவின் சிறப்பு சலுகைகளை பெறலாம் என
அறிவிக்கப்பட்டது.
ஜியோ பிரைம் ரீசார்ச் செய்த பின் ரூ.303 செலுத்தினால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் தினமும் 1ஜி.பி. 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ பிரைம் ரீசார்ச் செய்யாமல் ரூ.303 ரீசார்ச் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் 28 நாட்களுக்கு 2.5 ஜிபி 4 ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
உலகின் மிக வேகமாக வளரும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குகின்ற இந்த நிறுவனம் தற்போது 10.5 கோடி பயனர்களை வைத்துள்ளது.இதில் 30 சதவீதம் பேர் இலவச டேட்டா சேவைக்காக ஜியோவை இரண்டாம் பட்சமாக பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 7 கோடி பேரில் மூன்றில் இரண்டு பங்கு ஜியோ பிரைம் சேவையில் இணைந்து வருகின்றனர்.
வர்த்தக ரீதியில் முன்னணி வகித்து வரும் ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பிரைம் அல்லது ஜியோ எண்ணிற்கு வேறு எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட காலம் அதாவது ரீசார்ச் செய்யாமல் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.
ஜியோ ரிஜார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகள் எதுவும் வேலை செய்யாது.
இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் எதுவும் வேலை செய்யாது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். ரூ.99 அல்லாமல் மற்ற ரீசார்ச் செய்யாமல் ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.